முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5-வது ஐ.பி.எல். தொடர் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு கேப்டன் ஆனார் டிராவிட்

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.- 5 - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிராவிட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்தியன் பிரீமியர் லீக் டுவெண்டி-20 கிரிக்கெட் போட்டிகள் கிரிக்கெட் உலகில் தற்போது மிகவும் பிரபலம். கிரிக்கெட் வீரர்களின் சொர்க்கபுரியாக இந்த ஐ.பி.எல். தொடர் திகழ்ந்துவருகிறது. பன்னாட்டு கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல். தொடருக்காக தேர்வு செய்யப்பட்டு பணத்தை வாரி குவித்து வருகிறார்கள். இந்த போட்டிகளில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களும் இடம்பெற்று அவர்களும் கணிசமான அளவு பணத்தை இந்த தொடர் மூலம் சம்பாதித்து வருகிறார்கள். அத்தகையவர்களில் ஒருவர் சுழற்பந்து வீச்சில் 1000 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஷேன் வார்னே. இவர் ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஓய்வுபெற்றாலும் கடந்த 4 ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். அவரது தலைமையின்கீழ் அந்த அணி மிகச் சிறப்பாக செயல்பட்டது. இந்நிலையில் 4-வது ஐ.பி.ஏல். தொடரோடு தான் ஐ.பி.எல்.க்கும் தனது குட்பையை தெரிவித்துவிட்டார் வார்னே. இதையடுத்து அந்த அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த அறிவிப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும் பிரபல இந்தி நடிகையுமான ஷில்பா ஷெட்டி தனது இணையதள செய்தியில், வாழ்த்துக்கள் டிராவிட், வரவிருக்கும் ஐ.பி.எல். தொடரில் நீங்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெருமை தேடித் தருவீர்கள் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். ராகுல் டிராவிட் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் வார்னே கூறுகையில், டிராவிட் மிகவும் நல்ல மனிதர். ஒரு கேப்டனுக்கு உரிய சகல திறமைகளையும் பெற்றவர். மேலும் அணியை வழிநடத்திச் செல்லும் திறமை படைத்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

முதல் 3 போட்டிகளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடியுள்ள ராகுல் டிராவிட், கடந்த ஆண்டுதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரூ. 2.5 கோடிக்கு வாங்கப்பட்டார். கடந்த ஐ.பி.எல்.தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய இவர் 343 ரன்களை குவித்திருந்தார். டிராவிட் சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை குவித்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சினுக்கு பிறகு இந்த சாதனையை படைத்தவர் இவர் மட்டுமே.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்