முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப்பெரியாறு விசாரணையை மார்ச் வரை தேசிய மனிதஉரிமை கமிஷன் ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,டிச.- 6 - முல்லைப்பெரியாறு அணை விவகாரம் குறித்த விசாரணையை வரும் மார்ச் மாதம் வரை தேசிய மனித உரிமை கமிஷன் தள்ளிவைத்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அணையில் நீர்மட்டம் 152 அடி வரை முதலில் இருந்தது. யாரோ புரளியை கிளப்பிவிட்டதையொட்டி அணையின் நீர்மட்டத்தை கேரள அரசு வேண்டுமென்ற 136 அடியாக குறைத்தது. அதோடுமட்டுமல்லாது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுப்பதை நிறுத்தும் வகையில் புதிய அணையை கட்டும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை கமிஷன் விசாரிக்க இருந்தது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டு அமைத்த உயர்மட்ட கமிட்டியானது இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. அதனால் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்த பின்னர் விசாரணையை மேற்கொள்ளப்படும் என்று தேசிய மனித உரிமை கமிஷன் தெரிவித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக நேற்று டெல்லியில் கமிஷனின் முழுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது விசாரணையை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக கமிஷனின் உயரதிகாரி ஒருவர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். சுப்ரீம்கோர்ட்டு நியமித்த நீதிபதி ஆனந்த் தலைமையிலான உயர்மட்ட கமிட்டியானது தனது அறிக்கையை வரும் பிப்ரவரி மாதம் 29-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. அதன் பின்னரே விசாரணையை மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். புதிய அணை கட்டி தமிழகத்திற்கு தண்ணீர் தரப்படும் என்று கேரள அரசு கூறி வருகிறது. ஆனால் அந்த புதிய அணையின் கட்டுப்பாட்டை தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டிற்கு தருவீர்களா என்று கேட்டதற்கு பதில் எதுவும் கேரள அரசு அளிக்கவில்லை. தமிழகத்தில் விளைச்சல் அதிகமாக இருக்கிறதே என்பதும் தற்போது முல்லைப்பெரியாறு அணை இருக்கும் நிலப்பகுதியை அபகரிக்கும் நோக்கமும் கேரள அரசுக்கு இருக்கலாம் என்று பொதுமக்கள் பேசி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago