முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூபாயின் மதிப்பு சரிவு எதிரொலி: அழகு சாதன பொருட்களின் விலை அதிகரிக்கும்

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை, டிச. - 6 - அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இதனால் அழகு சாதன பொருட்களுக்கான மூலப் பொருட்களுக்கு அதிக பணம் கொடுத்து உற்பத்தியாளர்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மூலப் பொருட்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே ரூபாயின் செலாவணி மாற்று மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு அதில் எதிரொலிக்கிறது. இந்த காரணங்களால் இனி நுகர்வோர் அதிக விலை கொடுத்துத்தான் அழகு பொருட்களை வாங்க வேண்டும்.  இந்தியாவில் அழகு சாதன பொருட்களின் விலை ஆண்டுக்காண்டு அதிகரித்தபடியே இருக்கிறது. இந்த துறையில் மட்டும் விற்று முதல் ஆண்டுக்கு 200 ஆயிரம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த துறையில் விற்பனை வளர்ச்சி மட்டும் 20 சதவீதம் வரை இருக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கூட இந்தளவுக்கு வளர்ச்சி இல்லை.  எனவே இந்திய சந்தையை நோக்கி அயல்நாட்டு நிறுவனங்கள் படையெடுத்து வருகின்றன. என்ன விலையானாலும் அழகு சாதனங்களை வாங்குவார்கள் என்றாலும் அளவை குறைத்துக் கொள்வார்கள். எனவே புதிய நுகர்வோர்களை தேட வேண்டியதிருக்கும் என்று வருத்தப்படுகிறார்கள் இத்துறையில் உள்ள உற்பத்தியாளர்கள்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்