முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஸ்பெயின் வீரர் நடால்வெற்றி

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

செவிலே, டிச. - 6 - ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரரான ரபேல் நடால் வெற்றி பெற்றார். அவ ர் அர்ஜென்டினா வீரர் டெல்பெட்ரோவை தோற்கடித்தார்.  டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டம் ஸ்பெயின் நாட்டில் உள்ள செவிலே நகரில் நடைபெற்றது. இதன் ஆட வர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலும், அர்ஜென்டி னா வீரரும் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 4 செட் வரை நீடித்தது. இறுதி யில் ஸ்பெயின் வீரர் நடால் அபாரமாக ஆடி, 1 - 6, 6 - 4, 6- 1, 7 - 6 என்ற செட் கணக்கில், மார்டின் டெல்பெட்ரோவை வென்றார்.  இதற்கு முன்பு 2000, 2004, 2008 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் இந்த ப் போட்டியில் ஸ்பெயின் வீரர்கள் வெற்றி பெற்று உள்ளனர். நேற் றைய ஆட்டம் எதிர்பாராத வகையில் இருந்தது. 

ரபேல் நடால் மிகவும் சிரமப்பட்டு இந்தப் போட்டியில் ஆடினார். அவருக்கு ஈடு கொடுத்து அர்ஜென்டினா வீரரும் விளையாடினார். அதனால் இந்த ஆட்டம் சிறப்பாக அமைந்தது என்று ஸ்பெயின் நாட்டு அணித் தலைவர் அல்பர்ட் கோஷ்ட்ரா கூறினார். இந்தப் போட்டி சுமார் ஒரு மணி மற்றும் 50 நிமிடம் வரை நீடித்தது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் உலக தரவரிசையில் 2 -ம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடை சி நேரத்தில் இந்த ஒற்றையர் ஆட்டத்தில் பங்கேற்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்