முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 -வது ஒரு நாள் போட்டி மே.இ.தீவு அணியுடன் இன்றுமோதல்

புதன்கிழமை, 7 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

இந்தூர், டிச. - 8 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இந்தூரில் இன்று நடக்க இருக்கும் 4 -வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். கேப்டன் டேரன் சம்மி தலைமையிலான மே.இ. தீவு அணிக்கும் கேப் டன் சேவாக் தலைமையிலான இந்திய அணிக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. முன்னதாக இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக ஆடி 2 - 0 என்ற கணக்கில் தொடரை வென்றது. எனவே மே.இ.தீவுக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கேற்றார் போல இந்திய அணி சொந்த மண்ணில் ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் நன்றாக ஆடி வருகிறது.  இரு அணிகளுக்கு இடையே இதுவரை 3 போட்டிகல் முடிவடைந்து விட்டன. முடிவடைந்த இந்தப் போட்டியில் இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையே யான 4 -வது போட்டி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. இந்தப் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு துவங்குகிறது.  இந்தத் தொடரில் ரோகித் சர்மா தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறா ர். அடுத்தபடியாக விராட் கோக்லி நன்றாக ஆடி வருகிறார். மற்ற வீரர்கள் எதிர்பார்த்த அளவிற்கு சரியாக ஆடவில்லை. 

எனவே இன்று நடக்க இருக்கும் போட்டியில் இந்திய வீரர்கள் ஒருங்கி ணைந்து சிறப்பாக ஆடி வெற்றியைப் பெற்றுத் தரவேண்டும். கேப்ட ன் சேவாக் மற்றும் காம்பீர் இருவரது துவக்கம் இதுவரை மோசமாக உள்ளது. 

கடந்த போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ் மற்றும் வினய் குமார் இருவரும் சிறப்பாக பந்து வீசி னார்கள். ஆனால் யாதவ் இந்தப் போட்டியில் இடம் பெறவில்லை. 

யாதவிற்குப் பதிலாக இர்பான் பதானுக்கு, 3 வருட இடைவெளிக்குப் பின் அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி தனது திறனை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது. 

ஆல்ரவுண்டரான அவர் ரஞ்சி தொடரில் நன்றாக பந்து வீசியதன் அடி ப்படையில் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார். தவிர, அஸ் வின் பந்து வீச்சு இந்தத் தொடரில் எடுபடவில்லை. மிதுன் தனது திற னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். 

கடந்த போட்டியில் மே.இ.தீவு அணி வெற்றி பெற்றதால், இந்தப் போட்டியில் முழு உற்சாகத்துடன் களம் இறங்குகிறது. எனவே இந்தப் போட்டியில் கடும் சவால் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மே.இ.தீவு அணியில் பிராவோ, சாமுவேல்ஸ், பரத் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். கடந்த போட்டியில் பின்வரிசை வீரரான ராம்பால் அதிரடியாக விளையாடினார். தவிர, ரோச் , கேப்டன் சம்மி நரேன் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர். 

இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையேயான 4 -வது ஒரு நாள் போட்டி இந்தூரில் இன்று பிற்பகல் 2. 30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி தூர்தர்ஷன் மற்றும் நியோ கிரிக்கெட் சேனலில் நேர டியாக ஒளிபரப்பாகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்