முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய உலக சாதனை சச்சின் சாதனையை முறியடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது - சேவாக்

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

இந்தூர், டிச. - 10  - ஒரு நாள் போட்டியில் புதிய உலக சாதனை படைத்ததன் மூலம் டெ ண்டுல்கரின் சாதனையை முறியடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய அணியின் தற்காலிக கேப்டனான வீரேந்தர் சேவாக் தெரிவித் தார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற 4-வ து ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் அதிரடி துவக்க வீரரான சேவாக் 219 ரன்னை எடுத்து புதிய உலக சாதனை படைத்தார்.  ஒரு நாள் போட்டியைப் பொறுத்த வரை இதற்கு முன்பு இந்திய அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் 200 ரன் எடுத்ததே உலக சாதனையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.  இந்த உலக சாதனைக்குப் பிறகு மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநக ரான இந்தூரில் நிருபர்களைச் சந்தித்த கேப்டன் சேவாக் அவர்களது கேள்விக்கு அளித்த பதில் வருமாறு -  மே.இ.தீவு அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் நான் இரட்டை சத ம் அடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. போட்டித் தொடங்கும் போது, நிதானமாக ஆடினால் அதிக ரன்களை குவிக்கலா   ம் என்று கெளதம் காம்பீரிடம் யோசனை கூறினேன்.  ஆனால் மைதானம் எங்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது. நான் 170 ரன்கள் எடுத்த நிலையில், மேற்கு இந்தியத் தீவு கேப்டன் எனது பந்தை பிடிக்க தவறிவிட்டார். அது தான் நான் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பாக அமைந்தது.  அந்த வாய்ப்பை எனக்கு கடவுள் கொடுத்த வரமாக நினைத்தேன். கடவுள் என் பக்கம் இருக்கிறார் என்பது போலவும் உணர்ந்தேன். பவ ர் பிளே ஆட்டமுறை வந்த பிறகு, எனது இரட்டை சதம் உறுதியானது. எனக்கு ரசிகர்கள் அதிக ஆதரவு தந்தனர். நான் அதிக அளவில் சிக்சர் அடிக்க வேண்டுமென்று விரும்பினேன். அதன்படி,7 சிக்சர்களை அடித்துள்ளேன். முதல் வரிசை வீரர்கள் அதிக ரன்களை எடுத்தால் அணியின் வெற்றிக்கு அது கூடுதல் வாய்ப்பாக அமையும் என்று ஏற்கனவே நான் பலமுறை கருத்து கூறியிருக்கிறேன். அந்தக் கருத்து இந்தப் போட்டி மூலம் நிறைவேறி இருக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார்.  சேவாக்கின் உலக சாதனை ஆட்டத்தால் இந்திய அணி 400 ரன்னைத் தாண்டியது. இதனால் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 3 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்