முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி பங்குனி உத்திர திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்

திங்கட்கிழமை, 14 மார்ச் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

பழனி,மார்ச்.- 14 - பழனி முருகன்கோவில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  பழனி பங்குனி உத்திரத்தையொட்டி கொடியேற்றம் நேற்று காலை 10.15 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் ரிஷப லக்கனத்தில் திருவாவினங்குடி கோவிலில் நடைபெற்றது. கொடிமரத்தில் வேலும், மயிலும் சந்திரனும், சூரியனும் பொறித்த மஞ்சள் நிற கொடியேற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். இத்திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். மார்ச் 19ம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுகிறது. 

இவ்விழாவையொட்டி முருக பக்தர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் குடங்களில் நீர் சேகரித்து தீர்த்தக்காவடியாக கொண்டு வந்தனர். பின்னர் அந்த திருக்குடங்களில் உள்ள புனித நீரால் முருக பெருமானுக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. 

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாக அதிகாரி தி.ராஜமாணிக்கம், துணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர் நடராஜன், சித்தனாதன் சிவனேசன், தனசேகர், பழனிவேல், செந்தில்குமார், கந்தவிலாஸ் செல்வக்குமார், பாஸ்கர், பிரசாத ஸ்டால் அரிகரமுத்து, பில்டிங் காண்டிராக்டர் நேரு, பெரியநாயகி அறக்கட்டளை சுந்தரம், நியு திருப்பூர் லாட்ஜ் மகேஷ், வருத்தமில்லா வாலிபர் சங்க நிர்வாகி மூர்த்தி, ரத்தினம், தேரடி பாலு, சுகிதா மெட்டல் சுகுமாறன், சங்கு சந்திரன், டி.எஸ்.பி. சேது, மண்டகப்படி உபயதாரர்கள் நல்லம்மாள், சேனாதிபதி கவுண்டர், ஏ.எஸ். அர்ஜூனன், நல்லதம்பி, வாசுதேவன், சங்கராலயம் பாலசுப்பிரமணியம், கவுன்சிலர்கள் சுரேஷ், சுந்தர், பத்மினி முருகானந்தம்,  அறங்காவலர்குழு தலைவர் பாலசுப்பிரமணியம், அறங்காவர்கள் கார்த்திக் சிதம்பரம், நாகராஜன், குண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்