முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் வழக்கு - மொரீஸியசுக்கு மீண்டும் இந்தியா கடிதம்

திங்கட்கிழமை, 14 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 15 - ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய மொரீஸியஸ் நாட்டு நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கும்படி அந்நாட்டு அரசுக்கு மீண்டும் இந்தியா கடிதம் எழுதியுள்ளது. ஏற்கனவே கடிதம் எழுதியிருப்பதை நினைவூட்டி சி.பி.ஐ. தரப்பில் மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்பெக்ட்ரம் ஊழலில் மொரீஸியஸ் நாட்டைச் சேர்ந்த 12 நிறுவனங்களுக்கு தொடர்பிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக எடிசலாட் மொரீசியஸ் லிமிடெட், மொரீசியஸ் டெல்பி இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. இதே விவகாரத்தில் தொடர்புடைய ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, நார்வே, சிங்கப்பூர், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்கள் குறித்த தகவல்களை அளிக்குமாறு அந்நாட்டு அரசுகளுக்கு மத்திய அரசு சி.பி.ஐ. சார்பாக கடிதம் அனுப்பியுள்ளது. 

இந்நிலையில் மொரீசியசுக்கு இரண்டாவது தடவையாக நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்திற்கும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால் சிறப்பு விசாரணை குழுக்களை மொரீசியசுக்கு விரைவில் அனுப்ப சி.பி.ஐ.யும், அமலாக்க பிரிவும் திட்டமிட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்