முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரணாப் முகர்ஜி தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

திருப்பதி, ஜன. - 8 - மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் உடன் சென்றிருந்தார். இருவரும் சுமார் 30 நிமிடம் கோவிலில் இருந்தனர். தரிசனத்தை முடித்துவிட்டு முகர்ஜி புறப்படும்போது அவருக்கு லட்டு பிரசாதமும் புனித தீர்த்தமும் கோவில் நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. தரிசனத்தை முடித்துக்கொண்டு பிரணாப் முகர்ஜி டெல்லி புறப்பட்டுச் சென்றார். திருப்பதிக்கு அவர் வருவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு 25 ம் தேதி வெளியுறவு அமைச்சராக அவர் இருந்தபோது இங்கு முதல்முறையாக வந்து சுவாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago