Idhayam Matrimony

விபத்தை ஏற்படுத்தம் டிரைவர்களுக்கு கடும் தண்டனை: சுப்ரீம் கோர்ட்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜன. - 8 - மற்ற டிரைவர்கள் எச்சரிக்கை அடையும் வகையில், விபத்தை ஏற்படுத்தும் டிரைவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது. 1992 அக்டோபர் 30 ம் தேதி பஞ்சாபில் நடந்த ஒரு விபத்தில் 5 பேர் பலியானார்கள். இதில் தொடர்புடைய டிரைவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை 15 நாட்களாக குறைத்தும், அபராதத்தை 25 ஆயிரமாக உயர்த்தியும், பஞ்சாப் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டின் மீது நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவர்களுக்கு தண்டனை வழங்கும் போது அது மற்ற டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் அமைய வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், தண்டனை அதிகம் கிடைக்காது என்று டிரைவர்கள் எண்ணுவதற்கு அனுமதிக்க கூடாது. 17 ஆண்டுகளாக வழக்கு நடப்பதால் தண்டனையை குறைக்க வேண்டும் என டிரைவர்கள் கோருவதை ஏற்க முடியாது. விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த குற்றத்தை நீதிமன்றங்கள் சாதாரணமாக கருதி விட முடியாது. சந்தேகத்திற்கிடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றத்தின் அளவுக்கேற்ப நீதிமன்றங்கள் கடும் தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் பொறுப்பற்ற முறையில் வாகன ஓட்டுபவரின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.எனவே டிரைவர்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்