முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியஇளைஞரின் உடல் புனே வந்தது

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புனே, ஜன.- 8 - இங்கிலாந்தில் ஒரு மாதத்திற்கு முன்பு இனவெறி காரணமாக சுட்டுக்கொல்லப்பட்ட  23 வயது இந்திய இளைஞர் அனுஜ் பித்தேவின் உடல் நேற்று புனே வந்து சேர்ந்தது.  இங்கிலாந்தில் உள்ள  சல்போர்டு நகரில் உள்ள லேன்கேஸ்டர் பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிப்பு படித்து வந்த இந்திய இளைஞர் அனுஜ் பித்வே கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி  இங்கிலாந்து பிரஜை ஒருவரால் இனவெறி காரணமாக சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது உடலை பெறுவதற்காக இவரது  பெற்றோர்  இங்கிலாந்து சென்றனர். அங்கு அவர்களிடம் அனுஜ் உடல் ஒப்படைக்கப்பட்டது. அனுஜ் உடலுடன் அவரது பெற்றோர் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானம் மூலம் நேற்று நண்பகல் அளவில் மும்பை விமான நிலையத்தை வந்தடைந்தனர். பிறகு அங்கிருந்து  அனுஜ் உடல் கார் மூலம்  புனே நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை அனுஜ் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திற்கு சென்ற அவரது பெற்றோர் அந்த இடத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தங்களது மகன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திற்கு செல்லவே  தங்களுக்கு பெரும் கஷ்டமாக இருந்தது என்றாலும் ஈடு செய்ய முடியாத இந்த இழப்பை  தாங்கிக்கொண்டு  தாங்கள் அந்த இடத்திற்கு சென்று வந்ததாக தெரிவித்தனர்.

எங்களுக்கு உலகமே முடிந்து விட்டது.  என்ன வார்த்தை சொல்வதென்றே எங்களுக்கு தெரியவில்லை என்றும் அவர்கள் வேதனையோடு கூறினர். அனுஜின்  வாழ்க்கை கொடூரமாகவும், குரூரமாகவும் முடிக்கப்பட்டுள்ளது என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் தெரிவித்துள்ளார். புனேவுக்கு கொண்டு வரப்பட்ட அனுஜ் உடலுக்கு நேற்று மாலையே இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்