முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெய்ப்பூரில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மாநாடு துவக்கம்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

ஜெய்ப்பூர், ஜன. - 9 - வெளிநாடுவாழ் இந்தியர்களின் 3 நாள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று துவங்கியது. இந்த மாநாட்டின் இறுதி நாளின் போது ஜனாதிபதி பிரதீபா உரையாற்றுகிறார். நீர்வள பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மாநாட்டுக்கு முந்தைய கருத்தரங்குகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட அமைச்சர் வயலார் ரவி பேசுகையில், நீர் வளத்தை பாதுகாப்பது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இப்போது அன்றாடம் பயன்பாட்டில் தண்ணீரை வீணாக்கும் போக்கு காணப்படுகிறது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தில் நீர்வளத்தை பாதுகாப்பது அவசியமாகும். இதில் கலந்து கொண்ட மத்திய சுற்றுலா துறை அமைச்சர் சுபோத் காந்த் சகாய் கூறுகையில், ராஜஸ்தானில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினையை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்