முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவமனையில் இருந்து அன்னா ஹசாரே டிஸ்சார்ஜ்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      ஊழல்
Image Unavailable

 

புனே, ஜன. - 9 - உடல்நல பாதிப்பால் கடந்த ஒரு வாரமாக புனே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நேற்று அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆனார். கடந்த மாதம் 31 ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.  ஜனலோக்பால் மசோதாவை தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார் ஹசாரே. ஆனால் மத்திய அரசு அவரை புறம்தள்ளி விட்டது. தனது லோக்பால் மசோதாவை சமீபத்தில் லோக்சபாவில் கஷ்டப்பட்டு நிறைவேற்றி விட்டது. இதனால் ஹசாரே குழு அதிர்ச்சியடைந்தது. மேலும் அந்த குழுவின் போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவும் குறைந்தது. இதையடுத்து மும்பையில் தொடங்கிய 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை 2 வது நாளிலேயே முடித்துக் கொண்டார் ஹசாரே. அதன் பிறகு தான் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வந்த ஹசாரே கூறுகையில், நான் நலமாக இருக்கிறேன். டாக்டர்கள் ஒருமாதம் ஓய்வு எடுக்க கூறியுள்ளனர். அதன்படி ஓய்வெடுக்கவுள்ளேன் என்றார். அதன்படி நேராக தன் சொந்த ஊரான ராலேகான் சித்திக்கு புறப்பட்டு சென்றார் ஹசாரே. இந்த நிலையில் அடுத்து ஹசாரே என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஒரு மாத கால ஓய்வுக்குப் பின்னர் போராட்டக் களத்தில் ஹசாரே இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்