முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னைசேர்ப்பதை நிறுத்திவையுங்கள்: கட்காரிக்கு பகுஜன் சமாஜ் அமைச்சர்கடிதம்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, ஜன.- 9 - பா.ஜ.க.வுக்குள் பெரும் புயலை கிளப்பியுள்ளமுன்னாள் பகுஜன் சமாஜ் கட்சி அமைச்சரான பாபுசிங் குஸ்வாஹா, தன்னை பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளதை நிறுத்தி வைக்குமாறு கட்சி தலைவர் நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  மாயாவதி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இவர் மீது ஊழல் புகார்கள் பெருமளவில் எழந்ததை தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து தூக்கி விட்டார் மாயாவதி. இந்த நிலையில் அவரை தாங்கிப் பிடித்துக் கொண்டது பா.ஜ.க. இது மாயாவதி, மேனகா காந்தி உள்ளிட்ட பல முக்கிய பா.ஜ.க. தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மீது பெருமளவில் ஊழல் புகார்களை கூறி தேசிய அளவில் பா.ஜ.க. பெரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் இப்படி ஊழல்வாதியான குஸ்வர்ஹாவை கட்சியில் சேர்த்தால் மக்கள் என்ன நினைப்பார்கள். காங்கிரசார் கேவலமாக பேசுவார்கள் என்று இவர்கள் கொந்தளித்தனர். இந்த நிலையில் உ.பி. மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரான உமா பாரதி, தான் பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்று அறிவித்தார். இதனால் பா.ஜ.க தலைமை அதிருப்தி அடைந்தது.  இந்த நிலையில் தன்னால் பிரச்சினை வேண்டாம் என்றும், தன் மீதான உண்மையை நிரூபிக்கும் வரை பா.ஜ.க. உறுப்பினராக தன்னை சேர்க்கும் முடிவை நிறுத்தி வைக்குமாறு கட்காரிக்கு கடிதம் எழுதியுள்ளார் குஸ்வர்ஹா. இது குறித்து அவர் கூறுகையில், என்னால் பா.ஜ.க.வுக்கு எதிர்மறையான பெயர் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. நான் அப்பாவி என்பதை நிரூபிக்கும் வரை எனது உறுப்பினர் பதவியை நிறுத்தி வைக்குமாறு கட்சி தலைவரை கேட்டுக் கொண்டுள்ளேன். நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்