முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 மாநில தேர்தலில் பிரச்சாரம் செய்ய மாட்டேன்: ஹசாரே

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புனே, ஜன.- 9 - நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தேர்தல்  பிரச்சார சுற்றுப்பயணம் செய்ய மாட்டேன் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா கொண்டுவர வேண்டும் என்று போராடி வருபவர் அன்னா ஹசாரே. இவர்  தனது கோரிக்கையை வலியுறுத்தி சமீபத்தில் மும்பையில் 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். ஆனால் அவரது  உடல்நிலை மோசமானதால் அந்த உண்ணாவிரதம் பாதியிலேயே முடித்துக்கொள்ளப்பட்டது. அப்போது தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அன்னா ஹசாரே, வரவிருக்கும் 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்திருந்தார். ஆனால் அவர் புனே மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  இந்த சிகிச்சை முடிந்து நேற்று அவர் சொந்த கிராமத்திற்கு திரும்பினார். முன்னதாக புனேயில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்வீர்களா? என்று கேட்டதற்கு 5 மாநில சட்டமன்ற  தேர்தலில் தான் பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்றும், டாக்டர்கள் அறிவுரைப்படி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தான் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.   தங்களது எதிர்கால யுக்திகள், நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக தங்களது குழுவின் உயர்மட்ட கூட்டம் இந்த வார இறுதியில் டெல்லியில் நடைபெறும் என்றும் அவர் கூறினார். தங்களது வருங்காலத் திட்டம் என்ன என்று கேட்டதற்கு தங்கள் இயக்கத்தின் போராட்டம் ஓரிரு மாதங்களில் நடந்து முடியக்கூடியது அல்ல. இது ஆண்டுக்கணக்கில் தொடரும் என்று ஹசாரே கூறினார். கடந்த 25 ஆண்டுகளாகவே ஊழலுக்கு எதிராக தான் போராட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனது உடல்நலம் சரியானதுமே எங்களது போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்