முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரகசியமாக இந்தியா வர சல்மான் ருஷ்டி திட்டம்

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

டெல்லி, ஜன.- 19 - பிரபல ஆங்கில எழுத்தாளரான சல்மான் ருஷ்டியை இந்தியாவுக்குள் வரவிடக்கூடாது என்று முஸ்லிம் மத அமைப்புகள் தெரிவித்துள்ளன. அதனால் அவர் ஜெய்ப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவிற்கு ரகசியமாக வந்துசெல்ல திட்டமிட்டுள்ளார். பிரிட்டீஷ் இந்திய எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, வரும் 20 முதல் 24 ம் தேதிவரை ஜெய்ப்பூரில் நடக்க இருக்கும் இலக்கிய விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த நிலையில் முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காத ருஷ்டியின் விசாவை ரத்து செய்யுமாறு தாரூல் உலூம் தியோபாண்ட் என்ற இஸ்லாமிய மத அமைப்பு பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால் மத்திய அரசு இதுகுறித்து மவுனம் காத்து வருகிறது. ஆனால் இலக்கிய விழா அமைப்பாளர்கள் ருஷ்டி இலக்கிய விழாவில் கலந்துகொள்வார் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். ருஷ்டி ராஜஸ்தானுக்கு வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் இருப்பதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து தெரிவித்துள்ளார். மேலும் ருஷ்டி ஜெய்ப்பூருக்கு வருவதை அம்மாநில மக்களும் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.  சிதம்பரத்தை சந்தித்தபின் நிருபர்களை சந்தித்த முதல்வர் அசோக் கெலாட், ருஷ்டி ஜெய்ப்பூருக்கு வருவாரா இல்லையா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் தன்னிடம் இல்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில் சல்மான் ருஷ்டி இலக்கிய விழாவின் துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாது, பிற நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago