முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாபில் சோனியா காந்தி தேர்தல் பிரச்சாரம் ரத்து

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

மோகா, ஜன.20 - பஞ்சாபில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு  அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

இம்மாநிலத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள்  தங்களது வேட்பாளர்களை ஆதரித்து உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் மோகா, கபுர்தலா ஆகிய  இடங்களில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2  தேர்தல் பிரச்சார பேரணிகளில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரது சுற்றுப்பயணம்  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அந்த இரண்டு தேர்தல் பிரச்சார கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மோகாவில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங், பஞ்சாப் மாநிலத்திற்கான காங்கிரஸ் கட்சி விவகாரங்களுக்கான அமைச்சர் குல்சைன் சிங் சரக் ஆகியோர் மோகா, கபுர்தலா பேரணிகளில் பங்கேற்று பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சட்டமன்ற தேர்தலில் மோகா, கபுர்தலா ஆகிய இரு தேர்தல் பிரச்சார பேரணிகள்தான்  இம்மாநிலத்தின் மிகப்பெரிய தேர்தல் பிரச்சார பேரணிகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் சோனியா வருகை இல்லாததால் இது முக்கியத்துவம் பெறாது என்றும் கூறப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாகவே  கடுமையான பனி மூட்டம் காணப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் சோனியா எந்த தேதியில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்