முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதார்அடையாள அட்டை விவகாரம்: பிரதமருக்கு சிதம்பரம்கடிதம்

சனிக்கிழமை, 21 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

டெல்லி, ஜன.- 21 - ஆதார் அடையாள அட்டை விவகாரத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கு பிரச்சனை ஏற்படலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் வழங்கப்பட்டுவரும் ஆதார் அடையாள அட்டைக்காக பொதுமக்களிடம் கைரேகை உள்ளிட்ட தகவல்களை பெறுவதில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இதனால் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படலாம்  என்றும் மன்மோகன் சிங்கிற்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார். மேலும் இந்த விஷயத்தில் பிரதமர் உடனடியாகத் தலையிட்டு மத்திய அமைச்சரவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். 

இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நந்தன் நீலேகனி தலைமையிலான குழுவிடம் இந்த ஆதார் அடையாள அட்டை திட்டத்தை பிரதமர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்படைத்தார். இதையடுத்து இதற்காக வீடு வீடாக தகவல்கள் சேகரிக்கப்பட்டன. ஆனால் இந்த பணிகள் முழுமையாக நடக்கவில்லை. ஆனால் இதற்கான புகைப்படம் எடுக்கும் பணியும், கைரேகைகள் பதிவு செய்யும் பணிகளும் ஆரம்பித்து நடந்துவருகின்றன. தபால் நிலையங்கள் உட்பட சில இடங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த அட்டை வழங்கும் பணியில் பல குழப்பங்கள் உள்ளதாகவும், தேசப் பாதுகாப்புக்கு இது  பிரச்சனை ஏற்படுத்தலாம் என்றும் ப.சிதம்பரம் தொடர்ந்து கூறிவருகிறார். 

ப.சிதம்பரம் எழுதியுள்ள  கடிதத்தில் இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் இப்போது சேகரிக்கப்பட்டு வரும் தகவல்கள் முழுமையானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தகவல்களை மத்திய உள்துறையின் கீழ் வரும் பதிவாளர் ஜெனரல் அலுவலக ஊழியர்கள் பெற வேண்டுமா அல்லது நீலேகனி தலைமையிலான தேசிய அடையாள அட்டைக் குழுவே பெறலாமா என்பதிலேயே குழப்பம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது மக்கள் தெரிவிக்கும் தகவல்கள் சரியானதுதானா என்பது சரிபார்க்கப்படாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இது எதிர்காலத்தில் தேச பாதுகாப்பிற்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்றும் ப.சிதம்பரம் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago