முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சம்பள உயர்வை வலியுறுத்தி போரட்டம் தொடரும்: பெப்சி

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜன.25 - சம்பள உயர்வை வலியுறுத்தி போராட்டம் தொடரும் என்று திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளம் (பெப்சி) அறிவித்துள்ளது.  இது குறித்து விபரம் வருமாறு: சினிமா தொழிலாளர்களுக்கு ஊதிய விவகாரம் சம்பந்தமாக தமிழ்ப்பட அதிபர்களுக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு (பெப்சி) இடையில் மோதல் வலுத்துள்ளது.

இந்நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சஙக் பொதுக்குழு அவசரமாக நேற்று முன்தினம் கூடி, பெப்சிக்கு கட்டுபட மாட்டோம் என அறிவித்ததையடுத்து, நேற்று காலை பெப்சி பொதுக்குழு அவசரம் அவசரமாக கூடி விவாதித்து. படப்பிடிப்புக்கு எந்த ஒரு இடையூறு இல்லாமல் தொடர்ந்து போராடுவோம். எங்களின் நியாமான ஊதியத்தைப் பெறுவோம் என்று பெப்சி பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகளில் ஒருவரான ஜி.சிவா (டைரக்டர்) தெரிவித்தார்.

பெப்சியில் தலைவர் என்.ராமதுரையின் தலைமையில் பொதுக் குழுவினர் நேற்று காலை அவசரமாகக்கூடி திரைப்படத் துறையில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விவாதித்தனர்.

இதற்கிடையில் சினிமா டைரக்டர்கள் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான அமீர், தமிழக அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட வேண்டும். அப்போது தான் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண முடியும். அதன் மூலம் சினிமாவையே நம்பி இருக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் நிம்மதி பிறக்கும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டம், சென்னை பிலிம்சேம்பர் திரையரங்கில் நேற்று முன்தினம் காலை நடந்தது. சங்கத்தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

நான்கு நாட்களுக்கு முன்பு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை சார்ந்த சங்கங்கள் தன்னிச்சையாக ஒரு ஊதிய உயர்வை நிர்ணயம் செய்து அறிவித்து விட்டார்கள். வழக்கமாக தயாரிப்பாளர்கள் சங்கமும், தொழிலாளர்கள் சம்மேளனமும் கலந்து பேசி, அனைத்தும் பிரிவுகளுக்கான கையொப்பம் ஆன பிறகுதான் அது ஒப்பந்தம் எனப்படுகிறது. அதை மீறி அவர்கள் தன்னிச்சையாக ஊதிய உயர்வை நிர்ணயம் செய்து அறிவித்திருப்பது, அந்த நடைமுறை வழக்கத்தை மீறிய செயல் ஆகும் என்றார்.

ஆகவே இனிமேல் எங்கள் சங்கத்துக்கும், தொழிலாளர் அமைப்புக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை. எங்கள் சங்கத்தின் தயாரிப்பாளர்கள் இனிமேல் தங்கள் இஷ்டப்படி யாரை வேண்டு மானாலும் வைத்து தொழில் செய்து கொள்ளலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக எஸ்.ஏ.சந்திர சேகரன் மேலும் தெரிவித்தார்.

இதை மீறும் தயாரிப்பாளர்களுக்கு எங்களது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எந்தவித ஒத்துழைப்பும் அளிக்காது என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்தார். என்பது நினைவிருக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்