முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் மீது வழக்கு தொடர ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, பிப்.7 - நடிகர் பிரபு தேவாவின் தந்தை டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் மீது வழக்கு தொடர, சென்னை சமரச தீர்வு மையம் ஆலோசனை வழங்கியுள்ளது. சட்ட பணிகள் ஆணை குழுவிலுள்ள சமரச தீர்வு மையத்தில் 2 மாதங்களுக்கு முன்பு நடன ஆசிரியர் தாரா புகார் மனு கொடுத்து இருந்தார். அதந் புகாரில் அவர் கூறியிருப்பதாவது:

டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் என்னையும் என் மகனையும் பல ஆண்டுகளாக பராமரித்து வருகிறார். ஆனால் தற்போது எங்களுக்கு பராமரிப்பு தொகை தருவதை நிறுத்திவிட்டார். மேலும் ஜீவனாம்சாம் அளிக்க டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.

இந்த மனுவின் மீதான விசாரனை சமரச தீர்வு மையத்தில் வந்தது. அந்த மனுவின் மீது விசாரிக்க டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்திற்கு பல முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அனால் அவர் ஒரு முறை கூட ஆஜராகவில்லை. ஆகையால் தாராவுக்கு சமரச தீர்வு மையம் ஆலோசனை வழங்கியுள்ளது. அதன் படி இந்த பிரச்சனைகாக சந்தரம் மீது தாரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்று சமரச தீர்வு மையம் ஆலோசனை வழங்கியுள்ளது.

டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் பல படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளது. இவருடைய மகன்தான் பிரபல நடிகர் பிரபு தேவா என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்