முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானுக்கு செல்ல வேண்டாம் குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுரை

ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச்.- 20 - பூகம்பம், சுனாமி , அணுக்கதிர்வீச்சு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் நாட்டிற்கு யாரும் செல்ல வேண்டாம் என்று தனது குடிமக்களுக்கு அமெரிக்கா  வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜப்பானில் கடந்த 11 ம் தேதி பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து  மிகப்பெரிய சுனாமியும் ஜப்பானை தாக்கியது. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். மேலும் ஹுக்குசிமா என்ற இடத்தில் உள்ள அணு மின்சார நிலையமும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அணு மின்சார நிலையத்தில் உள்ள 6 அணு உலைகளில் 4 உலைகளில் வெடித்து  சிதறின. மேலும் இந்த உலைகளில் தீவிபத்தும் ஏற்பட்டுள்ளது.

இதனால் அணு கதிர்வீச்சு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் வட பகுதி ஜப்பான் மக்கள் பலரும் தென் பகுதிக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

அணு கதிர்வீச்சு அபாயம் உள்ள ஜப்பான் நாட்டிற்கு யாரும் செல்ல வேண்டாம் என்று தனது  குடிமக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுரை கூறியுள்ளது.

மேலும் ஜப்பானில் ஏற்கனவே தங்கி இருக்கும் அமெரிக்கர்களும் அங்கிருந்து உடனடியாக வெளியேறி தாயகம் திரும்புமாறும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

ஜப்பானுக்கு செல்ல வேண்டியவர்கள் தங்களது பயணத்தை தள்ளிப்போடுமாறும் அமெரிக்கர்களை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த வேண்டுகோளை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago