முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியா விவகாரத்தில் மேற்கத்திய ராணுவம் தலையிட கடும் எதிர்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

நெளக்சோத்,மார்ச்.- 21 - லிபியா மீது மேற்கத்திய நாடுகள் ராணுவ தலையீட்டுக்கு ஆப்பிரிக்க யூனியன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈராக்கில் மேற்கத்திய நாடுகள் ராணுவம் தலையிட்டது மாதிரி லிபியா நாட்டின் மீதும் ராணுவ நடவடிக்கை எடுக்க மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் பரிசீலனை செய்து வருகிறது. இதற்கு ஆப்பிரிக்க யூனியன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவின் வடக்கு நாடுகளில் ஒன்றான லிபியா விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் ராணுவ தலையீடு கூடாது என்று ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொரிடானியன் அதிபர் குய்ல்த் அப்தெல் அஜீஸ் தெரிவித்துள்ளார். லிபியா பிரச்சினைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக மேற்கத்திய நாடுகளின் தலையீடு தேவையில்லாதது. எங்கள் உறவு நாடுகளின் பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்துக்கொள்வோம் என்று அப்தெல் அஜீஸ் கூறினார். பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சி செய்வதோடு லிபியாவின் ஐக்கியம் மற்றும் இறையாண்மைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். லிபியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாடுகள் சபையும் பாரீஸ் நகர உச்சி மாநாட்டிலும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால் லிபியா பிரச்சினையில் புதிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதை நாங்கள் சந்தித்து இருக்கிறோம் என்றும் அஜீஸ் மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்