முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து சேவைகளும் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு

வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி, நவ 1 5 - திரு ப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா ஆங்கில புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் தேதி வருகிறது.

வழக்கமாக புத்தாண்டு தினத்தில் ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவது உண்டு. இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி விழாவும், அன்றைய தினத்தில் வருவதால் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்து வருகிறது. அன்றைய தினத்தில் விஐபி பக்தர்கள் குறைக்கப்பட்டு சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். ஆன்லைனில் வழங்கப்படும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வைகுண்ட ஏகாதசி தினத்தில் 5 ஆயிரமும், மறுநாள் துவாதசி தினத்தில் 10 ஆயிரமும் ஒதுக்கப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு முதல் அனைத்து கட்டண சேவை டிக்கெட்டுகளும் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது குறித்து கூடுதல் நிர்வாக அதிகாரி ஸ்ரீவாசராஜூ கூறியதாவது, ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் அதிகாலை நடக்கும் சுப்ரபாத சேவை, கல்யாண உற்சவம், கட்டண பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்வரதீப அலங்கார சேவை உள்ளிட்ட அனைத்து டிக்கெட்டுகளும் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும். டிமாண்ட் டிராப்ட் மற்றும் கடிதம் மூலம் முன்பதிவு செய்ததில் பல புகார்கள் வந்ததால் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. மேலும் அறைகள் ஒதுக்குவதும் ஆன்லைன் மூலமே முன்பதிவு செய்யப்படும். கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் தபால் நிலையங்களில் விற்கப்படும். முதல் கட்டமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. இதற்காக தபால் நிலையத்துக்கு ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 3.16 தேவஸ்தானம் சார்பில் கொடுக்கப்படும். படிப்படியாக இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களிலும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். திருப்பதியில் நேற்று கனமழை நீடித்தது. மலை பாதையில் ஆங்காங்கே மண் சரிவும், சிறிய கற்கள் உருண்டு விழுவதும் தொடர்ந்த வண்ணம் இருந்தது. கடும் குளிரால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்