முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவ.20-முதல் கோவாவில் ‘ஃபிலிம் பஜார் திரைப்பட விழா!

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, நவ,18: கோவாவில் மாரியட் ரிசார்ட்டில் ‘ஃபிலிம் பஜார்’ எனப்படும் திரைப்பட விழா இம்மாதம் 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து எட்டாவது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்ச்சியை தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் (சூகுனுஊ) நடத்துகிறது. சர்வதேச மற்றும் தெற்கு ஆசிய திரைப்பட துறையினரை இணைக்கும் ஒரு பாலமாக இது திகழும். தெற்கு ஆசிய பிராந்தியத்தில் திரைப்பட தயாரிப்பு மற்றும் வினியோகத்துறையில் ஈடுபடுபவர்களிடம் இருக்கும் திறமையை கண்டுபிடித்தல், வெளிப்படுத்துதல் மற்றும் ஆதரவு அளித்தல் போன்றவை இந்த ஃபிலிம் பஜார் திரைப்பட விழா -வின் முக்கிய நோக்கங்களாகும்.
உலகம் முழுவதிலும் உள்ள திரைப்பட விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் ஒன்று கூடும் இடம் பிலிம் பஜார் ஆகும். தெற்கு ஆசிய பிராந்தியத்தில் சர்வதேச திரைப்படங்களை வினியோகம் செய்வதற்கு இது சிறந்த வாய்ப்பளிக்கிறது.
இந்த ஆண்டில் ‘பிலிம் ஆஃபீசஸ்’ எனப்படும் திரைப்பட அலுவலகங்கள் பிரிவு புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதில் மாநில மற்றும் தேசிய அளவிலான சுற்றுலா வாரியங்கள் மற்றும் தேசிய திரைப்பட ஆணையங்கள் இடம்பெறும். இவை பிலிம் பஜாரில் தனி அலுவலகங்களை அமைக்கும். இவற்றின் வாயிலாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களிடம் தமது துறையை பிரபலபடுத்தும்..
தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் ஹார்லிகுயிலுடன் இணைந்து இந்த ஆண்டில் முதன்முறையாக ‘ரொமான்ஸ் ஸ்கிரீன்ரைட்டர்ஸ் லேப்’ எனப்படும் கதாசிரியர்களுக்கான சோதனைக்கூடம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. இதன் வாயிலாக காதல் மற்றும் பெண்களை மையமாக கொண்டு எழுதப்படும்  கதைகளை மேம்படுத்த இது முயற்சி மேற்கொள்ளும். இந்த சோதனைக் கூடம் மூன்று கட்டங்களில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கதாசிரியர்களுக்கு இந்திய திரைப்படத்துறையைச் சேர்ந்த மூன்று பிரபலங்கள் ஆலோசனை வழங்கி ஆதரவு அளிப்பார்கள். இந்த சோதனை கூடத்தின் கடைசி நிலையில் உச்சகட்டமாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தங்களது படைப்புகளை தயாரிப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குனர், நினா லாத் குப்தா இது குறித்து கூறுகையில், “இந்த ஆண்டில், பிலிம் பசார் திருவிழாவில் திரைப்பட அலுவலகங்கள், முதலீட்டாளர் சந்திப்பு, காதல் கதாசிரியர்களுக்கான சோதனைக்கூடம் ஆகிய புதிய பிரிவுகள் சேர்க்கப் பட்டிருப்பது குதூகலமளிக்கிறது. திரைப்படத்தை உருவாக்குபவர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களை ஒன்று சேர்க்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி சென்ற ஆண்டைப் போன்று இந்த ஆண்டிலும் வெற்றிகரமாக நடைபெறும்” என்று தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்