முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் டிச.17ல் பிசிசிஐ பொதுக்குழு கூட்டம்

புதன்கிழமை, 19 நவம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

சென்னை - இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) ஆண்டு பொதுக்கூட்டம் சென்னையில் டிசம்பர் மாதம் 17ம் தேதி நடைபெறவுள்ளது.
வரும் 20ம் தேதி நடைபெறுவதாக இருந்த பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டம், ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி முத்கல் குழுவின் அறிக்கை காரணமாக தாமதமாகி கொண்டே வந்தது. விசாரணை அறிக்கையில், பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து விலகி இருக்கும் ஐசிசி சேர்மனான சீனிவாசன் பெயரும் இடம்பெற்றிருப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் அவசர செயற்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஐபிஎல் சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு தொடர்பில்லை என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு எதிராக சீனிவாசன் நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாகவும், சென்னை அணியின் முன்னாள் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் ராஜ்குந்த்ரா ஆகியோர் பந்தய சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், ஐபிஎல் நிர்வாக அதிகாரி சுந்தர்ராமன் சூதாட்ட தரகர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் திட்டமிட்டபடி சென்னையில் நேற்று முன்தினம் பிசிசிஐ அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் பிசிசிஐ விடுத்த அறிக்கையில், பிசிசிஐயின் 85வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் டிசம்பர் மாதம் 17ம் தேதி காலை 11.30 மணிக்கு நடைபெறும். நீதிபதி முத்கல் குழு தாக்கல் செய்த இறுதி அறிக்கையில் சீனிவாசன் மீது எந்த களங்கமும் இல்லை என்பது தெளிவாகி உள்ளது . அவர் மீதான குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை. அடிப்படை ஆதாரமற்றவை. மேலும் பிசிசிஐ அமைப்பை நிலையற்றதாக்கும் முயற்சியில் அந்த குற்றச்சாட்டுகள் அமைந்துள்ளன. சுந்தர்ராமன் தனது நிலைப்பாடு குறித்து விசாரணை குழுவிடம் தெரிவித்துள்ளார். அவரது நிலைப்பாட்டை கேட்ட பின்பு பிசிசிஐ உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிப்பது என்ற முடிவுக்கு வ ந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து