முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதை பொருள் கடத்தலில் 11 வயது சிறுமி

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

கொலம்பியா - கொலம்பியாவில் போதை பொருள் கடத்தல் வழக்கில் 11 வயது சிறுமியை போலீஸார் கைது செய்தனர். கொலம்பியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு சுமார் அரைக்கிலோ போதை பொருளை கடத்திச் செல்வதற்கு அச்சிறுமி பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது.
இந்தச் சிறுமியின் பெற்றோர் பிரிந்து வாழ்கின்றனர். விடுமுறைக்காக தன் தந்தையிடம் சென்று வந்ததில் இருந்து சிறுமி உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் எனவும், அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவரது தாய் கூறினார்.
மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த போது அவரின் வயிற்றில் 104 கேப்ஸூல் மாத்திரைகள் இருந்தன. சோதனையில் அவற்றில் போதைப் பொருள் நிரப்பட்டிருப்ப‌து தெரியவந்தது. உடனே அந்தச் சிறுமியை போலீஸார் கைது செய்தனர். அவை என்னவகையான போதை மருந்து என்பதை அறியும் சோதனைகள் தற்போது நடைபெற்று வருவதாக போலீஸார் கூறினர். மேலும் அந்தச் சிறுமியின் தந்தையை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து