முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானநிலையங்கள் அனைத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - வெளிநாட்டிலிருந்து டெல்லி திரும்பிய இந்திய வாலிபருக்கு எபோலா நோய் அறிகுறி தென்பட்டதால் வெளிநாட்டிலிருந்து விமானங்கள் வந்திறங்கும் அனைத்து இந்திய விமான நிலையங்களிலும் எபோலா பரிசோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் இருந்து கடந்த 10ம் தேதி டெல்லி திரும்பிய இந்திய வாலிபருக்கு எபோலா நோய் அறிகுறி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. வாலிபருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நோயின் அறிகுறி இந்தியாவில் இல்லாமல் இருந்த வந்த நிலையில் கடந்த வாரம் டெல்லி வந்த வாலிபருக்கு இந்நோயின் அறிகுறி தென்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் எபோலாவை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் எபோலா பரிசோதனைக்கூடம் அமைக்கப்பட்டு டாக்டர்கள், செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா கூறியதாவது, எபோலா நோயை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. விமானத்துறை, குடியுரிமை, மருத்துவத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எபோலா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து விமான நிலையங்களையும் ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் அறிக்கையை சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விமான நிலையங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும். எபோலா பரிசோதனைக்கு தரமான உபகரணங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
விமானநிலையங்கள் தவிர, துறைமுகங்களிலும் எபோலோ நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எபோலா நோய் தடுப்பில் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படும் விதிமுறைகளை பின்பற்றுமாறு மருத்துவ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முக்கிய மருத்துவமனைகளில் இதற்கான சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது. எபோலா வை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு வருவதால் எபோலா குறித்து பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து