முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி மலையை சுற்றி 10கி.மீ தூரத்திற்கு இரும்பு வேலி

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

நகரி - திருப்பதி ஏழுமலையான் கோயில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் உள்ளது. இதனால் பாதுகாப்பை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மலையை சுற்றி பாதுகாப்பு கவசம் போல இரும்பு வேலி அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இந்த திட்டத்துக்கு இப்போது தேவஸ்தானம் இறுதி வடிவம் கொடுத்து பணியை தொடங்கவுள்ளது. முதல் கட்ட பணிக்கு ரூ . 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூடுதல் நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜூ கூறுகையில்,
திருமலை 1வது மலை பாதையில் 57வது வளைவில் இருந்து பாலாஜி நகர் வெளிப்புறம் வழியாக கோகர்பம் அருகே உள்ள மடங்களை இணைத்து ஸ்ரீசுந்தவனம் பார்வேட்டை மண்டபம் சிவா தோரணம் கூடுதல் நிர்வாக அதிகாரி இல்லம், சன்னிதானம் ஓய்வு அறை, கருடாத்திரி நகர், டோல்கேட் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த வேலி அமைக்கப்படுகிறது. அலிபிரிடோல்கேட் போர் கருடாத்திரி டோல்கேட்டும் விரிவுபடுத்தப்படும். இதே போல் ஏழுமலையான் கோயில் வடக்கு புறம், புஷ்கரணி மேற்குப்புறத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் அகற்றப்படும். இதன் மூலம் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியும். உண்டியல் காணிக்கை எண்ணப்படும் பரக்காலமணி கட்டிடம் நவீன வசதிகளுடன் மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து