முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பிரச்சினை: ஒபாமாவுக்கு ஷெரீப் கோரிக்கை

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் - இந்திய பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஒபாமா, காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக வெள்ளிக்கிழமையன்று குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க இந்தியா வருமாறு, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நாவாஷ் ஷெரீப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது இந்திய சுற்றுப்பயணம் குறித்து தகவலை தெரிவித்தார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
பாகிஸ்தான் பிரதமருடன் அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் பேசினார். அப்போது வரும் ஜனவரியில் இந்திய குடியரசு தின விழாவில் தலமை விருந்தினராக கலந்து கொள்ள இந்திய செல்லவிருப்பதை செரீப்பிடம் தெரிவித்தார். 2013-ல் வாஷிங்டன் சென்றிருந்த போது பாகிஸ்தானுக்கு வருமாறு ஒபாமாவுக்கு அழைப்பு விடுத்திருந்ததை நினைவுகூர்ந்த நவாஷ் ஷெரீப், பாகிஸ்தான் மக்கள் அமெரிக்க ஜனாதிபதியை வரவேற்க ஆர்வமாக இருப்பதாக ஒபாமாவிடம் தெரிவித்தார். அதற்கு ஒபாமாவும், பாகிஸ்தானில் இயல்பு நிலை திரும்பியவுடன் அங்கு நிச்சயம் வருவேன் என கூறினார்.
மேலும், இரு தரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க பாகிஸ்தான் எப்போதும் தயாராகவே இருப்பதாகவும் ஆனால் இந்தியா பாகிஸ்தானுடன் நட்பு பாராட்ட தயங்குவதாகவும் கூறினார். எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி அப்பாவி மக்கள் உயிரை பறிப்பது, தூதர்கள் மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்வது போன்ற துரதிர்ஷ்டவசமான செயல்களில் இந்தியா ஈடுபடுவதாகவும் ஷெரீப் குற்றம் சாட்டினார். இந்தியா - பாகிஸ்தான் இடையே இணக்கமான சூழலை பொறுப்பு இந்தியாவிடம்தான் உள்ளது என்றும் நவாஷ் ஷெரீப் தெரிவித்தார்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து