முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலிமையை காட்ட தயாராக இருக்க வேண்டும்: ஜனாதிபதி

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

தேஜ்பூர் - அவசியம் ஏற்பட்டால் இந்தியா தனது வலிமையை பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
அசாம் மாநிலம், தேஜ்பூர் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் பிரணாப் முகர்ஜி பங்கேற்று பேசியதாவது:
நமது நாடு இன்று அனைத்து துறைகளிலும் வளர்ச்சிப் பாதை யில் செல்கிறது. நாடு வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பாதையில் சென்றாலும் இந்திய துணைக் கண்டம் பல்வேறு அச்சுறுத்தல் களையும் எதிர்கொண்டு வருகிறது.
நாட்டில் அமைதி, ஒற்றுமையை பாதுகாக்கவும் ஒட்டுமொத்த வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லவும் நமக்கு தீர்க்கமான தற்காப்பு நடவடிக்கைகளும் பல மான பாதுகாப்பும் தேவைப்படு கிறது. அமைதி வழியில் செல் வதில் இந்தியா உறுதியாக இருந்தாலும், அவசியம் ஏற்படும் போது நாட்டின் இறையாண் மையை பாதுகாக்க, நமது வலிமையை பயன்படுத்த நாம் தயாராக இருக்கவேண்டும்.
அனைத்து துறைகளிலும் சமத்துவம் பேணுவதில் நமது நாடு நம்பிக்கை கொண்டுள்ளது. நாட்டின் இன்றைய ஆண்களும் பெண்களும் இதற்கு உதாரணமாகத் திகழ்கின்றனர். இந்த வழியில் நமது ஆயுதப் படைகள் முன்னேறிச் செல் வதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இவ்வாறு பிரணாப் பேசினார்.
முன்னதாக இந்திய விமானப் படையின் 115-வது ஹெலிகாப்டர் பிரிவு மற்றும் 26-வது படைப்பிரிவுக்கு கவுரவ மிக்க குடியரசுத் தலைவர் கொடியை பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து