முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலாச்சார காவல் பணி தேவை யில்லை: மோகன்லால்

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      சினிமா
Image Unavailable

திருவனந்தபுரம் - கலாச்சார காவல் பணி தேவை யில்லை என்று மலையாள நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ள கருத்துகள் வருமாறு:
பொதுமக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. அவை குறித்து அரசியல் தலைவர்களுக்கு அக்கறையில்லை. ஆனால் கலாச் சாரத்தை காப்பாற்றுவதாகக் கூறிக் கொண்டு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். சில அமைப்புகளும் இதில் ஈடுபடுகின்றன.
பெங்களூர் நகரை ஓய்வூதிய தாரர்களின் சொர்க்கபுரி என்று அழைப்பார்கள். இப்போது அந்த நகரம் காதலர்களுக்கும் சொர்க்கமாக விளங்குகிறது. மாணவர்களும் மாணவிகளும் பேசுவதற்கு தடை விதிப்பது அழகல்ல.
அதேநேரம் முத்தப் போராட்டம் என்ற பெயரில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இதனால் யாருக்கு என்ன பயன்? ஆண், பெண் என்றாலே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. நட்பு, அன்பு, சகோதரப் பாசம், தாய்-மகன் உறவு என எத்தனையோ பாச உறவுகள் உள்ளன. அவற்றை புரிந்து கொள்ள வேண்டும்.
அண்மைக்காலமாக சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப் படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அவை குறித்து அரசியல் கட்சிகள் எவ்வித அக் கறையும் கொள்ளவில்லை. இது போன்ற சமூகவிரோத செயல் களை தடுக்க போராட வேண்டும்.
முத்தமிடுவதற்கும், முத்த மிடாமல் இருப்பதற்கும் நமக்கு உரிமை உண்டு. ஆனால் என் பார்வையில் நீ முத்தமிடக் கூடாது என்று உத்தரவிடுவதற்கு யாருக்கும் உரிமையில்லை. ஒருவேளை அதுபோன்ற காட்சிகள் அநாகரிகமாக தெரிந்தால் அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடலாம். அதுதான் அறிவார்ந்தது.
இவ்வாறு மோகன்லால் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து