முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைதான சாமியார் ஆசிரமத்தில் துப்பாக்கிகள் - பெட்ரோல் குண்டுகள்

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

சாமியார் ராம்பாலிடம் போலீஸ் 5 நாள் விசாரணை.

சண்டிகர் - அரியானாவில் கைதான சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் கர்ப்ப சோதனை கருவிகளும், பெட்ரோல் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.
அரியானா மாநிலம் ஹிசார் அருகே பர்வாலாவில் சாமியார் ராம்பால் ஆசிரமம் அமைத்து ஏராளமான பெண் சீடர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தங்கியிருந்தார். ஆசிரமத்தையும் தன்னையும் பாதுகாக்க தனியாக பாதுகாப்பு படை அமைத்து தனி ராஜ்யம் நடத்தி வந்தார். இங்கு ஏராளமான முறைகேடுகளும் சட்ட மீறல்களும் நடந்தன. 2006ம் ஆண்டு ஆசிரமத்தில் நடந்த கொலை தொடர்பாக ராம்பால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் மீது மேலும் பல வழக்குகளும் உள்ளன.
கோர்ட் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் போலீசார் ஆசிரமத்துக்குள் புகுந்து சாமியார் ராம்பாலை கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும் ராம்பால் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 6 பேர் பலியானார்கள். கைதான சாமியார் ராம்பால் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ராம்பால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது சத்லோக் ஆசிரமத்தில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
அப்போது ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 3 ரிவால்வார்கள், 19 ஏர்கன் துப்பாக்கிகள், 2 டபுள் பேரல் துப்பாக்கிகள், 2 ரைபிள்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளும் ஆயுதங்களும் சிக்கின. இது தவிர மிளகாய் தூள் நிரப்பிய குண்டுகள், அமிலம் நிரப்பப்பட்ட சிரிஞ்சுகள், ஹெல்மெட்டுகள், கைத்தடிகள், 20 ஜோடி கறுப்பு உடைகள், 800 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 டீசல் டேங்க் ஆகியவையும் இருந்தது. மேலும் ராம்பாலின் படுக்கை அறையையொட்டி உள்ள அறையில் சோதனையிட்ட போது கர்ப்ப சோதனை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு மிளகாய் பொடி மாத்திரைகள், குஷன் மெத்தைகள், ராட்சத மெத்தைகள் போன்றவைகளும் இருந்தன. மூடப்பட்டிருந்த ஒரு குளியல் அறையில் பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இவர் மத்திய பிரதேச மாநிலம் அசோக் நகரை சேர்ந்த பிஜலேஷ் என தெரியவந்தது. ராம்பாலுடன் மாவோயிஸ்ட் தலைவர் ஒருவரும் தங்கியிருந்தார். அவரும் ராம்பாலுடன் கைது செய்யப்பட்டார். எனவே ராம்பாலுக்கும் மாவோயிஸ்டுகளுக்குமான தொடர்பு பற்றி விசாரணை நடத்துவதற்காக சத்தீஸ்கர் மாநில போலீஸ் உதவியை அரியானா மாநில போலீசார் நாடியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து