முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க சிபிசிஐடி போலீசில் மனு

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      சினிமா
Image Unavailable

சென்னை - நடிகர் சங்க தலைவர் சரத்குமார், துணைத் தலைவர் விஜயகுமார், தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் ஆகியோர் நேற்று எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு சென்று ஏ.டி.ஜி.பி. அஸ்டோஸ் சுகலாவை சந்தித்தார்கள். அவர்களுடன் சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் நளினி, டைரக்டர் சங்கம் சார்பில் ரமேஷ் கண்ணா, ரவி மரியா, சண்முக சுந்தரம், பெப்சி சார்பில் சபரி கிரிசன், சுந்தர் ஆகியோரும் சந்தித்தார்கள்.
திருட்டு வி.சி.டி.யை ஒழிக்கும் படி அவர்கள் வற்புறுத்தினார்கள். போலீஸ் ஏ டி.ஜி.யிடம் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:–
மக்களின் முதல்வர் ஜெயலலிதா திரையுலகினரின் வேண்டுகோளை ஏற்று 2001–2006 ஆண்டுகளில் திருட்டு வி.சி.டிக்கு எதிராக குண்டர் சட்டத்தை கொணடு வந்தார். திருட்டு வி.சி.டி. புழக்கம் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. எனவே குண்டர் சட்டத்தின் துணை கொண்டு திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க வேண்டும். புதிய படம் வெளியானதும் ஏதோ ஒரு திரையரங்கில் திருட்டு வி.சி.டி எடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட திரையரங்குகள் மீதும் அதில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து சி.டி. கடைகளிலும் திருட்டு வி.சி.டி விற்கப்படுகிறது. எனவே அருகேயுள்ள காவல் நிலையங்கள் மூலம் காவல்துறையினர் தொடர்ந்து சோதனை செய்யும் பட்சத்தில் திருட்டு வி.சி.டி. விற்பதை தடுக்கலாம். தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள லோக்கல் சேனல்களில் புதுப்படம் வெளியான அடுத்த நாளே அந்த திரைப்படத்தை போட்டு வருகிறார்கள். ஒவ்வொரு சேனலையும் குறைந்தது 10 ஆயிரம் பேர் பார்த்து விடுகிறார்கள். ஏறக்குறைய 300–க்கும் மேற்பட்ட லோக்கல் சேனல்களின் உள்ளன. அப்படி செய்யும் லோக்கல் சேனல்கள் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
காய்கறி விற்பனை போல சாலை ஓரங்களிலும், ரெயில் நிலையங்களிலும், அரசு பேருந்துகள் தவிர தமிழகத்தில் ஓடும் அனைத்து ஆம்னி பஸ்களிலும், பஸ் நிலையங்களிலும் பயமின்றி திருட்டு வி.சி.டி. விற்கிறார்கள். இவற்றை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து