முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வேப்பிலையின் நன்மை

மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை மரம் வேப்ப மரம். வேப்ப மரத்தின் இலையை 4,000 வருடங்களாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தி வருகின்றனர்.  வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அதனை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும். வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, இது சொரியாசிஸ், பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும்.

கயி்ற்றின் மீது நடப்பவர்கள்: ரஷ்யாவில் வினோத கிராமம்

நம்மூர்களில் திருவிழாக் காலங்களில் வித்தை காட்டும் கலைஞர்கள் தெருவில் இரு புறமும் கயிறை கட்டி கூத்தாடுவதை பார்த்திருக்கிறோம். அதையை சற்று உயரமாகவும், நீளமாகவும் மாற்றி வெளிநாடுகளில் சாதிப்பவர்களும் இருக்கிறார்கள். அண்மையில் இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபில் டவர் மீது கயிற்றை கட்டி அசால்ட்டாக நடந்து சென்று சாதனை செய்த வீடியோ நெட்டில் வைரலாக பரவியதை அனைவரும் பார்த்திருக்கலாம்.ஆனால் ஒரு கிராமமே கயிற்றில் நடக்கும் வித்தை தெரிந்தவர்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா.. என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த கிராமத்தில் முதியவர் தொடங்கி இளையவர் வரை, பெண்கள் தொடங்கி சிறுவர்கள் வரை அனைவரும் கயிற்றில் நடக்கும் வித்தை தெரிந்தவர்களாக அசத்து கின்றனர். இந்த வினோத கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா.. ரஷ்யாவில்.. பொதுவாகவே சர்க்கஸ் துறையில் ரஷ்யர்கள் தான் எப்போதும் முன்னிலையில் இருப்பவர்கள். கடந்த நூற்றாண்டில் சர்க்கஸ் தொழில் செழித்து கிடந்த கால கட்டத்தில் ரஷ்யர்கள் உலகம் முழுவதையும் வியாபித்திருந்தனர். தற்போது சர்ககஸ் தொழில் படிப்படியாக குறைந்து விட்டது.மக்களுக்கும் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவது இல்லை. அது கிடக்கட்டும்.. கயிற்றின் நடக்கும் அந்த கிராமம் Russia’s Dagestan autonomous republic என்று சொல்லப்படும் பிராந்தியத்தில் உள்ள Tsovkra-1 என்ற சிறிய கிராமம் தான் அது. அந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுமே கயிற்றில் நடக்கும் திறன் பெற்றவர்கள் என்பதாலேயே அது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த காலத்தில் 3 ஆயிரம் மக்கள் தொகையை கொண்டிருந்த அந்த கிராமம் தற்போது 300 பேராக குறைந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கயிற்றின் மேல் நடக்கும் மரபை அவர்கள் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உறவுக்கு 'நோ'

சிம்பன்சி வகையைச் சேர்ந்த குரங்குகள், தனக்கு குழந்தை வேண்டும் என்றால், தனது ரத்த சம்பந்தம் இல்லாத சிம்பன்சிகளுடன் உறவு வைத்துக் கொள்ளுமாம். இதற்கு காரணம், தனது ரத்த உறவுகளை தவிர்த்து பிற ரத்த வகையை சேர்ந்த சிம்பன்சிகளுடன் கூடும் போது பிறக்கும் குட்டிகள் ஆரோக்கியமாக இருப்பதால்தான்.

தலையணை சண்டை

உலகம் முழுவதும் சர்வதேச தலையணை சண்டை தினம் ஏப்ரல் 1-ல் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க், ஹாங்காங், இத்தாலி, கனடா போன்ற பல நாடுகளில்சர்வதேச தலையணை சண்டை தினம் முட்டாள்கள் தினந்தன்று ஒரு வேடிக்கை விளையாட்டாக கொண்டாடபடுகிறது.

முகப்பருவை குறைக்க

கொழுப்பு நீக்கப்பட்ட உணவுப் பொருட்களும் பிம்பிளை உண்டாக்கும். கொழுப்பு நீக்கப்பட்ட பாலைக் அதிகமாக குடிப்பதாலும், குறிப்பாக கொழுப்பு குறைவான தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடும் போது, அந்த சர்க்கரை கொலாஜன் இழைகளைப் பாதிப்பதோடு, பாதிக்கப்பட்ட சரும செல்களை புதுப்பிக்க முடியாமலும் செய்யும். இதனால் முகப்பரு ஏற்படுகிறது.

புலிக்கு ஆதரவு

அமெரிக்காவில் சின் சினாட்டியில் மிருக காட்சி சாலையில்  மலேசிய புலி ஒன்றால் ஒதுக்கப்பட்ட 3 பெண் குட்டிகளை மிருக காட்சி சாலை ஊழியர் தனது வீட்டுக்கு தூக்கி சென்று வளர்த்தார். அவரது வீட்டில் உள்ள 6 வயது ஆஸ்திரேலிய ஷெப்பர்டு நாய் 3 புலிக்குட்டிகளையும் தற்போது அன்புடன் பராமரித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்