தனக்கு ஓவியம் வரைய தெரியும்: வைரலாகும் டோனியின் வீடியோ

திங்கட்கிழமை, 20 மே 2019      விளையாட்டு
dhoni viral video 2019 05 20

புதுடெல்லி : தான் வரைந்த ஓவியத்தை காட்டி டோனிவெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது.

புதிய பொழுதுபோக்கு...

இந்திய அணியைப் பொறுத்தவரை அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட வீரர்களில் ஒருவர் டோனி. இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணிக்காக இவர் விளையாடுவதால், தமிழகத்தில் இவருக்கு கூடுதலான ரசிகர்கள் இருக்கிறார்கள். கேப்டன் கூல், மஹி, எம்எஸ்டி, தல உள்ளிட்ட பல பெயர்களில் உலா வருகிறார் டோனி. கிரிக்கெட், பைக் என ஆர்வம் கொண்டுள்ள டோனிதற்போது தன்னுடைய புதிய பொழுதுபோக்கு ஒன்று குறித்தும் பேசியுள்ளார்.

ஓவியம் வரைவதில்...

இது குறித்து டோனிவீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு கிரிக்கெட் பிடித்திருந்தாலும் எனக்கு ஓவியம் வரைவதிலும் விருப்பம் உண்டு என தெரிவித்துள்ளார். மேலும் ''நான் சில ஓவியங்களையும் வரைந்துள்ளேன். என்னுடைய முதல் ஓவியக் கண்காட்சியை விரைவில் நடத்த உள்ளேன். அதற்கு இன்னும் சில காலம் ஆகும். ஓவியம் தெரிந்தவர்கள் எனது ஓவியத்தை பார்த்து அறிவுரைகளை கூறுங்கள். நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்'' என்று  தெரிவித்துள்ளார். மேலும் டோனிவரைந்த சில ஓவியங்களையும் காண்பித்து அது குறித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

டோனியின் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. கிரிக்கெட்டை போல ஓவியத்திலும் தல வெளுத்து வாங்குவார் என ரசிகர் பலரும் பதிவிட்டு வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து