முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உளவு துறைகளுக்கு புதிய தலைவர்களை நியமித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு

புதன்கிழமை, 26 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

ரா மற்றம் புலனாய்வு பிரிவிற்கு புதிய தலைவர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார் பிரதமர் மோடி.

அமைச்சரவையில் நியமனக் குழுவின் தலைவராக இருந்து வருகிறார் பிரதமர் மோடி. புலனாய்வு பிரிவின் (ஐ.பி.,) புதிய தலைவராக அரவிந்த் குமாரையும், ரா.,வின் புதிய தலைவராக சமந்த் கோயலையும் நியமித்து நேற்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

பா.ஜ.க. அரசின் பெரிய சாதனைகளாக அண்டை நாடுகளால் பார்க்கப்படும் 2016 சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் 2019 பிப்ரவரியில் நடத்தப்பட்ட பாலாகோட் விமானப்படை தாக்குதல் திட்டம் வகுத்ததில் முக்கிய பங்கு வகித்தவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரவிந்த் குமார், காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் கைதேர்ந்தவராக திகழ்ந்தவர். அசாமில் போலீஸ் அதிகாரியாக பணியை துவங்கிய இவர், பிறகு புலனாய்வு பிரிவில் இணைந்து மத்திய அரசிற்காக பணியாற்றி வந்தவர்.

சமந்த் கோயல், 1990-ம் ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் பஞ்சாப்பில் உச்சத்தில் இருந்த சமயத்தில், பாகிஸ்தான் ஊடுவலையும், பயங்கரவாதத்தை திறம்பட கையாண்டவர். பிறகு ரா மூத்த அதிகாரியாக சிறப்பாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து