முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுகள் அணி முன்னாள் வீரர் லாரா நலமுடன் வீடு திரும்பினார்

புதன்கிழமை, 26 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரபல பேட்ஸ்மேன் பிரையன் லாரா (வயது 50).  இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து மும்பை பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.  இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ரசிகர்களுக்கு நன்றி...

இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், காலை அதிகளவில் உடற்பயிற்சி மேற்கொண்டேன். இதனால் நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவரை சந்திப்பது சிறந்தது என நினைத்தேன்.  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன்.  தொடர்ந்து வலி இருந்தது.  நிறைய பரிசோதனைகள் நடந்தன. நான் நலமுடன் இருக்கிறேன் என அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.  சிகிச்சை முடிந்து விரைவில் ஓட்டல் அறைக்கு திரும்புவேன்.  எனது ரசிகர்கள் அதிக கவலை அடைந்து உள்ளனர் என எனக்கு தெரியும்.  உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் என அவர் கூறினார்.

விடுவிக்கப்பட்டார்...

அவர் மருத்துவமனையில் இருந்து மதியம் 12.20 மணியளவில் நேற்று விடுவிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து லாரா நலமுடன் உள்ளார் என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்து உள்ளது.  வேறு தகவல்கள் எதனையும் அவர்கள் வெளியிடவில்லை.

400 ரன்கள்...

அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 12 ஆண்டுகள் ஆகிறது. 1990 முதல் 2007 வரை 17 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி 131 டெஸ்டில் 11,953 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 52.89 ஆகும்.  இவற்றில் 34 சதங்களும், 48 அரை சதங்களும் அடங்கும். 299 ஒரு நாள் போட்டியில் விளையாடி 10,405 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 40.17 ஆகும்.  19 சதங்களும், 63 அரை சதங்களும் அடித்துள்ளார்.  லாரா டெஸ்ட் இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் எடுத்த முதல் மற்றும் ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து