முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்ணாவிராத போராட்டம்: அ.தி.மு.க.வுக்கு விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியமில்லை: நேரில் ஆதரவு தெரிவித்த பிரேமலதா பேட்டி

வியாழக்கிழமை, 27 ஜூன் 2024      அரசியல்
Admk-DMDK-2024-06-27

சென்னை, அ.தி.மு.கவுக்கு விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று உண்ணாவிராத போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தொடர் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இந்த நடவடிக்கையை கண்டித்தும், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. 

புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியும் நேரில் சந்தித்து அ.தி.மு.க உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அவரும் உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் சீனிவாசன் கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், எஸ் பி வேலுமணி, பி.தங்கமணி, சி.பொன்னையன், தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன், பொள்ளாச்சி ஜெயராமன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அ.தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க உண்ணாவிராத போராட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு அதற்கு ஆதரவு தெரிவித்தார். உண்ணாவிரத போராட்டத்திற்கு வருகை தந்த பிரேமலதா விஜயகாந்தை, எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.

அப்போது பிரேமலதா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது., கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றி சட்டசபையில் விவாதிக்காமல் வேறு எங்கு பேசுவது?. சட்டசபையில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக திமுக அரசு பேசவிடாமல் தடுக்கிறது. கள்ளக்குறிச்சி சம்பவத்தை சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளியே வரும். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும். அ.தி.மு.கவுக்கு விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை. கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவியை தேமுதிக (இன்று) சந்திக்கிறது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச அனுமதிக்க வேண்டும் என்பதுதான் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த கோரிக்கை; அப்போது திமுக எம்.பி.,க்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். ஆனால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான அ.தி.மு.கவினர் பேசினால் தடுக்கிறார்கள். பாராளுமன்றம் என்றால் ஒரு நீதி, சட்டப்பேரவை என்றால் ஒரு நீதியா? எதிர்கட்சிகளின் குரல்வளையை நசுக்க நினைத்தால் அடுத்த தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர். 2026-ல் நிச்சயம் ஆட்சி மாறும். அ.தி.மு.க-தேமுதிக கூட்டணியில் நல்லாட்சி மலரும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து