முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னேற்றத்துடன் கம்பேக் கொடுப்போம் தோல்விக்கு பிறகு ரஷித் கான் பேட்டி

வியாழக்கிழமை, 27 ஜூன் 2024      விளையாட்டு
27-Ram-53

Source: provided

பார்படாஸ்: டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் தோல்வி குறித்து விளக்கமளித்துள்ளார் ஆப்கன் கேப்டன் ரஷித் கான்.

12 ஓவர்களில் அவுட்... 

அரையிறுதியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் அணி, தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 12 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

கடினமாக உள்ளது... 

இந்தத் தோல்வி குறித்து ஆப்கன் கேப்டன் ரஷித் கான் கூறியதாவது: ஒரு அணியாக இந்தத் தோல்வி கடினமாக இருக்கிறது. நாங்கள் இன்னும் நன்றாக விளையாடியிருக்க வேண்டும். ஆனால் ஆடுகளம் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. அதுதான் டி20 கிரிக்கெட். நீங்கள் அனைத்து வகையான ஆடுகளங்களுக்கும் தயாராக இருக்க வேண்டும். தெ.ஆ. வீரர்கள் நன்றாகப் பந்து வீசினார்கள்.

எதிர்பாராதது... 

எங்களது தொடக்க வீரர்கள் (வேகப் பந்து வீச்சாளர்கள்) தொடர் முழுவதுமே சிறப்பாக பந்து வீசினார்கள். தொடக்கம் சிறப்பாக அமைய வேண்டும். முஜீப் காயம் எதிர்பாராதது. எங்களது வேகப் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். அதனால் ஸ்பின்னர்களான எங்களுக்கு வேலை எளிதாகியது.

தொடர்சியாக... 

நாங்கள் இந்த டி20 உலகக் கோப்பையில் மகிழ்ச்சியாக கொண்டாடினோம். தெ.ஆ. போன்ற வலுவான அணியுடன் தோற்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் எங்களது தொடக்கம். எங்களால் எந்த அணியையும் வெல்ல முடியுமென நம்பிக்கை இருக்கிறது. இதற்கான செயல்முறைகளை தொடர்சியாக செய்ய வேண்டும். இது எங்களுக்கு மிகப்பெரிய கற்றல். 

முன்னேற்றத்துடன்...

இந்த உலகக் கோப்பையில் இருந்து நம்பிக்கையை எடுத்து கொள்கிறோம். எங்களிடம் திறமை இருக்கிறதென எங்களுக்குத் தெரியும். அழுத்தமான சூழ்நிலைகளில் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை மட்டுமே மேம்படுத்த வேண்டும். முக்கியமாக மிடில் ஆர்டர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். மிடில் ஆர்டர் பேட்டர்கள் கடைசிவரை விளையாட வேண்டும். அணியாக கற்றுக்கொள்கிறோம்; இதுவரை நல்ல முடிவுகளைப் பெற்றுள்ளோம். குறிப்பாக பேட்டிங்கில் இன்னும் முன்னேற்றத்துடன் கம்பேக் கொடுப்போம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து