முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு விவகாரம் குறித்து வரும் 7-ம் தேதி வரை புகார் அளிக்கலாம் : மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2024      இந்தியா
Union-Education-Ministry 20

Source: provided

புதுடெல்லி : நீட் தேர்வு விவகாரம் குறித்து புகார் தெரிவிக்க உயர்நிலை குழுவை அமைத்துள்ள மத்திய கல்வி அமைச்சகம், வரும் 7-ம் தேதி வரை அது தொடர்பான புகார்களை மாணவர்கள், பெற்றோர்கள் தெரிவிக்க இணையதளம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 

மே மாதம் நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பாராளுமன்றத்திலும் நீட் முறைகேடு விவகாரம் எதிரொலித்தது. 

இந்த நிலையில் மாணவர்களிடமிருந்து புகார்களை பெற மத்திய அரசு உயர்நிலைக் குழு ஒன்று அமைத்துள்ளது. இது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் கூறியிருப்பதாவது, 

இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் குழு அமைக்கப்பட்டது. அரசு நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் உறுப்பினர்களை உள்ளடக்கி இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

வரும் 7-ம் தேதி வரை மாணவர்கள், பெற்றோர்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை இந்த குழுவிடம் கூறலாம். நீட் தேர்வு தொடர்பான புகார்கள் மட்டுமின்றி பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை தெரிவிப்பதற்கான https://innovateindia.mygov.in/examination-reforms-nta/ என்று இணையதள முகவரியையும் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து