முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்: கவர்னர் ரவியை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் மனு

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2024      தமிழகம்
Premalatha 2024-06-28

Source: provided

சென்னை : கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்  மனு அளித்தார்.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து பேசினார். அப்போது விஷ சாராய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி அவர் கவர்னரிடம் மனு அளித்தார். 

பின்னர் கவர்னர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, 

கள்ளகுறிச்சியில் இத்தனை உயிர்கள் போனபின்பு, இன்றைக்கு இந்த அரசு ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயத்தை அழித்து விட்டதாகக் கூறுகிறது. இப்போது எடுத்த இந்த நடவடிக்கைகளை முன்கூட்டியே ஏன் எடுக்கவில்லை? போன வருடம் இதே போன்ற நிகழ்வு நடந்தது. அதன்பிறகு சரியான நடவடிக்கை எடுத்து தடுத்திருந்தால் இத்தனை உயிர்களை நாம் இழக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

ஆட்சியாளர்கள், அதிகாரிகள், காவல்துறை துணையில்லாமல் நிச்சயமாக  சாராயம் காய்ச்ச முடியாது. ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உதவியோடு தான்  சாராயம் காய்ச்சப்படுகிறது, விற்கப்படுகிறது என்று கள்ளக்குறிச்சி மக்கள் சொல்கிறார்கள். 

மக்களின் வறுமையை பயன்படுத்தி  சாராயம் போன்ற போதை வஸ்துகளை விற்று தமிழகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளனர். இது குறித்துத்தான் கவர்னரிடம் முறையிட்டுள்ளோம். கவர்னரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அந்த மனுவில் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

மதுபான ஆலைகளை மூட வேண்டும். சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும். நாங்கள் சொன்னதை கவர்னர் மிக கவனமாகக் கேட்டார்.  தமிழகத்தின் எதிர்காலம் எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று கவர்னர் மனவருதத்தோடு தெரிவித்தார். இது கவலைக்குரிய விஷயம் எனக்கூறி எங்களிடம் வருத்தப்பட்டார். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து