முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவையில் மயங்கி விழுந்த காங்கிரஸ் பெண் எம்.பி.

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2024      இந்தியா
MP 2024-06-28

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி. மயங்கி விழுந்தார்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் நேற்று ஜனாதிபதியின் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முன்பாக நீட் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி 'இன்டியா' கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. புலோ தேவி நேதம், திடீரென மயங்கி சரிந்துவிட்டார். இதைக் கண்ட அவைத் தலைவர் ஜகதீப் தன்கர், உடனடியாக அவருக்கு உதவி செய்யும்படி அருகில் இருந்த எம்.பி.க்களிடம் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் எம்.பி. புலோ தேவிக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு புலோ தேவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர், மாநிலங்களவை மீண்டும் தொடங்கியபோது, நீட் விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து