முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானின் நிலைக்கு அதன் கர்மா தான் காரணம் : ஐ.நா. சபையில் ஜெய்சங்கர் தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2024      உலகம்
Jaishankar 2024-03-29

Source: provided

நியூயார்க் : பாகிஸ்தானின் பொருளாதார நிலையின்மையினால் ஏற்பட்ட வறுமை நிலைக்கு அதன் கர்மாதான் காரணம் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. சபையின் பொதுகூட்டத்தில்  உலக நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றினர். இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேசியுள்ளார். இந்த கூட்டத்தில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது, 

மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் நாம் இங்கு கூடியுள்ளோம். உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை இந்தியா தொடர்ந்து சர்வதேச சமூகத்தை எச்சரித்து வருகிறது. 

உக்ரைன் மற்றும் காசா பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். சர்வதேச சமூகத்திற்கு ஆற்றிய பங்கை விட அதிக ஆதாயத்தை சில நாடுகள் பெற்று வருகின்றன. பல நாடுகள் ஐ.நா.வின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதால் பின்தங்கியுள்ளன.

ஆனால்  சில நாடுகள் தெரிந்தே அழிவுப் பாதையை தேர்ந்தெடுகின்றன. உதாரணமாக எங்களின் அண்டை நாடான பாகிஸ்தானைச் சொல்லலாம். இல்லை கடந்த பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரித்து வருகிறது. பாகிஸ்தானின் ஏற்றுமதியையும் இறக்குமதியையும் பயங்கரவாதத்தை வைத்தே அளவிட முடியும்.  

மற்ற நாடுகளுக்குத் தீமை நடக்க வேண்டும் என்று நினைத்த அவர்களின் கர்மாவினால் தான் இப்போது இந்த நிலையில் பாகிஸ்தான் உள்ளது. பாகிஸ்தானின் பயங்கரவாதம் என்றும் வெற்றியடையாது. பாகிஸ்தானிடம் இருந்து  ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதே எங்களின் இலக்கு. இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து