முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரச்சாரம் நிறைவு: காஷ்மீரில் அக். 1-ல் இறுதிக்கட்ட தேர்தல் : 40 தொகுதிகளில் நடக்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2024      இந்தியா
Kashmir 2024-03-29

Source: provided

ஸ்ரீநகர் : காஷ்மீரில் இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில் அங்கு 3-வது மற்றும் இறுதி கட்டமாக 40 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் அக்டோபர் 1-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது.

90 தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த 18-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 2-வது கட்டமாக 26 இடங்களுக்கு கடந்த 25-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 56 சதவீதம் ஓட்டு பதிவாகி இருந்தது. 

அதை தொடர்ந்து 3-வது மற்றும் இறுதி கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபர் 1-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது. ஜம்மு காஷ்மீரில் இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. 

ஹிஸ்புல்லா இயக்க தலைவர் ஹசன் நஸ்ரலிபா இஸ்ரேல் வான் தாக்குதலில் கொல்லப்பட்டதால் முன்னாள் முதல்வரும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரான மெகபூபா முப்தி நேற்று தனது பிரச்சார கூட்டத்தை ரத்து செய்தார்.  தனது கட்சி பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மக்களுடன் நிற்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து களத்தில் நிற்கிறது. மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து போட்டியிடுகிறது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8-ம் தேதி நடக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து