முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மான் கீ பாத் நிகழ்ச்சி: மூலிகை செடி வளர்ப்பில் ஈடுபடும் மதுரையை சேர்ந்த ஆசிரியைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2024      இந்தியா
MODI 2023 04 30

Source: provided

புதுடெல்லி : பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில், மூலிகை செடி வளர்ப்பில் ஈடுபடும் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஸ்ரீக்கு பாராட்டு தெரிவித்தார். 

நேற்று நடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில் இது குறித்து மோடி கூறும் போது, நம்மைச் சுற்றி எந்த ஒரு துன்பத்திலும் பொறுமையை இழக்காத சிலர், அதிலிருந்து கற்றுக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்மணிகளில் ஒருவர் தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஸ்ரீ. 

இவர் அரிய மற்றும் மிகவும் பயனுள்ள மூலிகைகள் கொண்ட அற்புதமான தோட்டத்தை உருவாக்கி உள்ளார். அவரது தந்தையை பாம்பு கடித்தபோது அவரை காப்பாற்ற பாரம்பரிய மூலிகைகள் உதவியது. 

இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர் பாரம்பரிய மருந்துகள் மற்றும் மூலிகைகளை ஆராயத் தொடங்கினார். அவர் மதுரை வரிச்சியூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட அரியவகை மருத்துவ குணம் கொண்ட மூலிகை தோட்டத்தை கடினமாக உழைத்து உருவாக்கி உள்ளார்.

கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைகளை மக்களுக்கு வழங்கினார். இவரது மூலிகைத் தோட்டத்தைப் பார்க்க வெகு தொலைவில் இருந்து மக்கள் வருகிறார்கள். 

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருந்த நமது பாரம்பரியத்தை சுபஸ்ரீ முன்னெடுத்துச் செல்கிறார். அவரது மூலிகை தோட்டம் நமது கடந்த காலத்தை எதிர் காலத்துடன் இணைக்கிறது. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து