முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முடங்கிய திட்டப்பணிகள்: டெல்லி முதல்வர் அதிஷி அமைச்சர்களுடன் ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2024      இந்தியா
Adishi 2024-03-29

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் முடங்கிய திட்டப்பணிகள் குறித்து மாநில அமைச்சர்களுடன் முதல்வர் அதிஷி நேற்று ஆலோசனை மேற்கொண்டார். 

டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. அதை தொடர்ந்து கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 

இதனை தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்வராக மூத்த அமைச்சர் அதிஷி  பதவியேற்றுக் கொண்டார்.  இதனிடையே, டெல்லியில் முடங்கிய திட்டப்பணிகள் குறித்து முதல்வர் அதிஷிக்கு,  அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி இருந்தார். 

அதை தொடர்ந்து டெல்லி தலைமை செயலகத்தில் முதல்வர்  அதிஷி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை அமைச்சர்களுடன் பல்வேறு திட்டப்பணிகள் தொடர்பாக அதிஷி ஆலோசனை நடத்தினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து