முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு தமிழகத்தில் விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2024      தமிழகம்
Chennai Airport

Source: provided

சென்னை : தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 

அதன்படி சென்னை விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 18 லட்சத்து 53 ஆயிரத்து 115 பேர் பயணித்துள்ளனர். ஆனால் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 17 லட்சத்து 53 ஆயிரத்து 115 பேர் மட்டுமே பயணித்து உள்ளனர். 

கோவை விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 2,70,013 பேரும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 814 பேரும் பயணித்துள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 668 பேரும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 104 பேரும் பயணித்துள்ளனர். 

தூத்துக்குடி விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 19 ஆயிரத்து 237 பேரும், கடந்த ஆண்டு 16 ஆயிரத்து 526 பேரும் பயணித்துள்ளனர். சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மதுரை விமான நிலையத்தில் மட்டும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம் மதுரையில் 1,08,944 பேர் பயணித்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 408 பேர் பயணம் செய்துள்ளனர். சேலம் விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்டு் மாதம் 10,994 பேர் பயணித்துள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சேலம் விமான நிலையம் செயல்படவில்லை.

சென்னை விமான நிலையத்தில் ஒட்டுமொத்தமாக பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள போதிலும் பன்னாட்டு விமான நிலையத்தில் மட்டும் பார்க்கும்போது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தைவிட இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 

கடந்த ஆகஸ்டு மாதம் 4 லட்சத்து 86 ஆயிரத்து 177 பேர் பயணித்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு 4 லட்சத்து 94 ஆயிரத்து 796 பேர் பயணித்துள்ளனர். இது அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து