முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2024      தமிழகம்
Fishermen 2024-03-29

Source: provided

ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 17 பேரை  இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.  

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மூவாயிரம் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த செல்வம், உதிர்தராஜ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளை எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

தொடர்ந்து படகுகளிலிருந்த ஜெபஸ்டியன் (38), ராஜீவ் (35), விவேக் (35), இன்னாச்சி (36), சாமுவேல் (33), பிரிச்சோன் (31), பாஸ்கரன் (30), இருதய நிஜோ (26), மரியா ஸ்டெடின் (27), துரை (39), அருள் தினகரன் (23), சுரேஷ் (45), ஜீவன் ஃப்ரைஷர் (22), மார்க்மிலன் (37), மில்டன் (48), ரொனால்ட் (48), சேசுராஜா (45) ஆகிய 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் மீனவர்கள் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. மேலும், கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை 55 தமிழக மீனவர்களின் படகுகளை சிறைப்பிடித்து, 413 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து