முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. கூட்டணி முன்பைவிட இப்போது வலுவாக உள்ளது : மதுரையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2024      தமிழகம்
EVKS 2023 04 12

Source: provided

மதுரை : தி.மு.க. கூட்டணி இப்போது முன்பைவிட வலுவாக உள்ளது என்று மதுரையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எந்த பொறுப்பை கொடுத்தாலும் சிறப்பாக செய்யக்கூடியவர் உதயநிதி. கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி, அமைச்சரான ஓராண்டில் சிறப்பாக பணி செய்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு அவரது தந்தை முக.ஸ்டாலின் உறுதியும், தாத்தா கலைஞரின் கடுமையான உழைப்பும் உள்ளது. துணை முதல்-அமைச்சர் பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின் சிறந்த முறையில் பணியாற்றுவார்.

பார்முலா 4 கார் பந்தயத்தை சென்னை மாநகரில் நடத்திக்காட்டிய பெருமை கொண்டவர். சனாதானத்தை பற்றி மிகத் தெளிவாக, வீரமாக பேசிய துணிச்சல் மிக்க இளைஞராக உதயநிதி இருந்தார். தமிழக காங்கிரஸ் செயல்பாடு நடந்து கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு வேலை கொடுக்கின்றனர். இன்னும் கொஞ்சம் தீவிர படுத்தவேண்டும்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது அனைத்து கட்சியினரின் விருப்பம்தான். அது இப்போது சாத்தியம் இல்லை என்பது அனைத்துக் கட்சிகளும் சொல்லி இருக்கின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் இது பற்றி தெளிவாக சொல்லியிருக்கிறார். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. கூட்டணி முன்பை விட வலுவாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து