முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டொனால்டு டிரம்ப் பிரச்சாரத்தில் துப்பாக்கியுடன் வந்த நபர் கைது

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2024      உலகம்
Trump 2024-10-14

Source: provided

அமெரிக்கா: அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப் கலிபோர்னியாவை அடுத்த கோச்செல்லாவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அங்கு நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட டிரம்ப், வாக்காளர்களிடையே உரையாற்றினார். டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த கூட்டத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி மற்றும் தோட்டா ஏற்றப்பட்ட கைத்துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிரம்ப் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஒருவர் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டதை ரிவர்சைடு கவுண்டி ஷெரிப் அலுவலகம் உறுதுப்படுத்தி இருக்கிறது. துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டு இருப்பதை அறிந்திருப்பதாகவும், சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தின் போது டிரம்ப், பேரணியில் கலந்து கொண்ட யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்படவில்லை என்ற போதிலும், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று எஃப்.பி.ஐ. மற்றும் அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து